உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் பல காயங்களுடன் உயிரிழந்து கிடந்த பெண்

Share

பிரித்தானியாவில் பல காயங்களுடன் உயிரிழந்து கிடந்த பெண்

பிரித்தானியாவின் பிளாக்பூல் பகுதியில் பெண் ஒருவர் பலதரப்பட்ட காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் கொலை விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பிரித்தானியாவின் பிளாக்பூல் பகுதியில் உள்ள ரெட்கார் சாலைக்கு சந்தேகத்திற்கிடமான வகையில் ஏற்பட்ட இறப்பு குறித்த நிகழ்விற்காக பொலிஸார் வியாழக்கிழமை 11 மணிக்கு முன்னதாக அழைக்கப்பட்டனர்.

அங்கு பலதரப்பட்ட காயங்களுடன் பெண் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் தற்போது கொலை விசாரணையை தொடர்ந்துள்ளனர்.

அத்துடன் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைக்கு பிறகு பாதிக்கப்பட்ட பெண் அலிசன் டாட்ஸ்(Alison Dodds) என கண்டறியப்பட்டுள்ளது.

அலிசன் டாட்ஸ் மரணத்தை பொலிஸார் தற்போது சந்தேகத்திற்குரிய உயிரிழப்பாக கருதி இருப்பதுடன், சம்பந்தப்பட்ட பகுதியில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக லங்காஷயர்(Lancashire) காவல் துறையின் துப்பறியும் தலைமை காவலர் ஜேன் வெவ் வழங்கிய தகவலில், முதலில் உயிரிழந்த அலிசன் டாட்ஸ் குடும்பத்தினருடன் எங்கள் ஆழ்ந்த எண்ணங்கள் இருப்பதாக தெரிவித்தார்.

அத்துடன் மோசமான இந்த நிகழ்வு குறித்து தங்களது விசாரணை குழு அவர் உயிரிழந்த இடத்தை சுற்றி தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...