சாப்பிடுவதற்கு முகக்கவசத்தைக் கழற்றிய முதியவரைத் தாக்கிய பெண்!

Mask

விமானத்தில் முகக்கவசம் அணியாமல் சாப்பிட்டதற்காக 80 வயது முதியவரை, பெண் ஒருவர் தாக்கியுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால் தாக்குதலை மேற்கொண்ட அந்த பெண் முகக்கவசம் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் நடைபெற்றுள்ளது. டெல்டா ஏர்லைன் விமானத்தில் பயணித்த குறித்த பெண், தனக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த முதியவரைத் தாக்கியுள்ளார்.

இதேவேளை பயணத்தின் போது முகக்கவசம் அணிந்திருந்த குறித்த முதியவர், உணவருந்துவதற்காக முகக்கவசத்தைக் கழட்டியபோதே குறித்த பெண் அவரைத் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து, விமானம் தரையிறங்கியதும் குறித்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பயணிகளின் இது மாதிரியான செயல்களை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என டெல்டா ஏர் லைன் நிறுவனம் தெரிவித்துள்ளது.


#WorldNews

Exit mobile version