பயணி முகக்கவசம் அணியாமையால் விமானத்தை திருப்பி ஆரம்ப இடத்திற்கே கொண்டு சென்ற சம்பவம் மியாமி – லண்டன் விமானப்பாதையில் நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவின் மியாமி நகரில் இருந்து லண்டன் நோக்கி நேற்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது.
அதில் பயணித்த ஒரு பயணி முகக்கவசம் அணிய மறுத்துள்ளார். பயணி தனது நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருந்துள்ளார்.
இதனால் விமானி உடனடியாக விமானத்தை ஆரம்ப விமான நிலையமான மியாமி விமான நிலையத்திற்கு திருப்பினார்.
விமானம் தரையிறங்கியதும் முகக்கவசம் அணிய மறுத்த பயணியை பொலிஸார் கைதுசெய்ததுடன் பயணத்தையும் இரத்து செய்தனர்.
#world
Leave a comment