தலிபான் தலையீட்டையடுத்து, காபூலில் இருந்து விமான இயக்கத்தை பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுத்தியுள்ளது.
ஊழியர்களை மிரட்டுதல், வலுக்கட்டாயமாக விதிகளை மாற்றுதல் போன்ற தலிபான் தலையீட்டால், பாகிஸ்தான் ஏர்லைன்ஸ், விமான இயக்கத்தை நிறுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளனர்.
இதனால் காபூலில் உள்ள பெரும்பாலான மக்கள் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து வருகின்றனர்.
இதனையடுத்து வெளிநாட்டு விமான ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தமது விமானப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளன.
எனினும் பாகிஸ்தான் ஆரம்பத்திலிருந்து தலிபான் அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில் தமது விமானங்களைப் பாகிஸ்தான் காபூலில் இருந்து இயக்கி வந்தது.
குறித்த ஒரு விமான நிலையமே சர்வதேச விமானங்களை இயக்கி வந்த நிலையில், தற்போது அங்கிருந்து விமானங்களை இயக்குவதை நிறுத்தியுள்ளதாக, பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன் அறிவித்துள்ளது.
Leave a comment