ஜப்பான் நாட்டின் பிரதமர் யோஷிஹிடே சுகா (Yoshihide Suga) தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளேன் என அறிவித்துள்ளார்.
இம் மாதம் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிடப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யோஷிஹிடே சுகாவின் ஆட்சி தொடர்பாக அதிருப்தி காணப்பட்ட நிலையிலேயே அவர் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்
கொரோனாத் தொற்று காரணமாக ஜப்பானில் டோக்கியோ உட்பட சில நகரங்களில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் 28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அந் நாட்டின் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதை விடுத்து கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடப் போகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
Leave a comment