நியூசிலாந்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு வாசி!
நியூசிலாந்து விற்பனை நிலையத்தில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நபர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் நேற்று(03) நியூசிலாந்தின் விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்தியவேளை பின்தொடர்ந்து வந்த பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்ட நபர் இலங்கையைச் சேர்ந்தவர் எனவும், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர் எனவும் அந்த நாட்டின் பிரதமர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் குறித்த நபர் மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் எட்டு வயதில் கொழும்பு சென்று அங்கு கல்வி கற்றுள்ளார். பின்னர் 2011ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்றுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.