எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில், தீ வைத்தமையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவிலுள்ள Shenzhen என்ற இடத்தில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த ஒருவர் திடீரென அந்த எரிபொருள் நிரப்பும் குழாயை எடுத்து, கார் மீது பெற்றோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.
அந்தக் காருக்குள் பெண் ஒருவர் அமர்ந்திருந்துள்ளார். இதனை அவதானித்த பிறிதொரு நபர், ஓடோடிச் சென்று அந்தப் பெண்ணைக் காரிலிருந்து வெளியேற்றியுள்ளார்.
அதற்குள் அந்த பெற்றோல் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கிட்டத்தட்ட 10 பேர் வரை வேகமாக வந்து தீயைக் கட்டுப்படுத்தியுள்ளனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்தக் காட்சி, அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV கமெராவில் பதிவாகியுள்ளது. இக்காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#WorldNews