இம்முறை அமைதிக்கான நோபல் பரிசு, கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்க போராடிய இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்களான திமித்ரி மொரொட்டா, மரியா ரிசா ஆகிய இருவருக்குமே இவ்வாறு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
கருத்து சுதந்திரம் ஜனநாயகத்துக்கான அடிப்படையாக இருப்பதை வலியுறுத்தியமைக்காகவே, குறித்த இரு பத்திரிகையாளர்களுக்கும் அமைதிக்கான நோபல் பரிசானது அறிவிக்கப்பட்டுள்ளது.
வருடந்தோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி போன்ற விடயப் பரப்புக்களில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது.
இவ்வருடத்தின் நோபல் பரிசுகள் கடந்த 4 ஆம் திகதியிலிருந்து அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இவ் வருடத்திற்கானமருத்துவம், இயற்பியல், வேதியியல் போன்ற பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று அமைதிக்கான நோபல் பரிசு பத்திரிகையாளர்களான திமித்ரி மொரொட்டா, மரியா ரிசா ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டது.
நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவர்களில் மரியா ரிசா தனது சொந்த நாடான பிலிப்பைன்ஸில் அதிகார துஷ்பிரயோகம், வன்முறை பயன்பாடு மற்றும் வளர்ந்து வரும் சர்வாதிகாரத்தை வெளிப்படுத்துவதற்கு கருத்து சுதந்திரத்தை பத்திரிகையின் மூலம் பயன்படுத்தியவர் என்பதுடன், நோபல் பரிசு பெற்ற மற்றொருவரான திமித்ரி மொரொட்டா பல ஆண்டுகளாக ரஷ்யாவில் பேச்சுச் சுதந்திரத்துக்கு ஆதரவாக நின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment