download 29 1 1
இந்தியாஉலகம்செய்திகள்

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகாிப்பு!

Share

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 11,109 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,753 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக கேரளாவில் 3,059, மகாராஷ்டிராவில் 1,152, டெல்லியில் 1,420 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 48 லட்சத்து 8 ஆயிரத்து 22 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 6,628 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 42 லட்சத்து 23 ஆயிரத்து 211 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 53,720 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றை விட 4,098 அதிகமாகும்.

கொரோனா பாதிப்பால் நேற்று டெல்லியில் 6 பேர், மகாராஷ்டிராவில் 4 பேர், ராஜஸ்தானில் 3 பேர் உள்பட 21 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட 6 மரணங்கள் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 91 ஆக உயர்ந்துள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு: மயூரு நெத்தி குமாரகேவின் விளக்கம் மற்றும் பின்னணி

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை...

09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...

07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...