சிறுமி முன்னால் நீச்சல் குளத்தில் பெண் காவலாளியுடன் உல்லாசம் !
இந்தியாவில் 6 வயதுக் குழந்தையின் முன்பாக நீச்சல் குளத்தில் பெண் காவலர் ஒருவருடன் ஆடையின்றி உல்லாசமாக இருந்துள்ள டிஎஸ்பி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவருடன் அநாகரீகமாக நடந்துகொண்ட அக் குழந்தையின் தாயாகிய பெண் காவலரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பணிபுரியும் காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் நீச்சல் குளத்தில் பெண் காவலருடன் சல்லாபத்தில் ஈடுபட்டுள்ளதுடன் குறித்த பெண் காவலரின் 6 வயது மகளும் பக்கத்தில் இருந்துள்ளார் .இக்காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது .
இந்நிலையில் காணொளியில் இருக்கும் அவ் அதிகாரியை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்படட நிலையில் அவ் வீடியோவில் இருப்பது பீவர் மாவட்ட டிஎஸ்பி என்பதும், அவருடன் இருந்த பெண் காவல் துறையில் பணியாற்றுகின்ற ஒரு பெண் காவலர் என்பதும் தெரியவந்துள்ளது.
குறித்த பெண் காவலரின் கணவர் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்தபோதும் அப்புகாரை பொலிஸார் ஏற்றுக்கொள்ளாது திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதனையடுத்து ராஜஸ்தான் மாநில டிஜிபியிடம் அவர் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த டிஎஸ்பி கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, குழந்தை இருப்பதன் காரணமாக அவருடன் உல்லாசம் அனுபவித்த குறித்த பெண் காவலரை கைதுசெய்யாது பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
அத்தோடு புகாரை ஏற்க மறுத்த காவல் ஆய்வாளரையும் பணி இடைநீக்கம் செய்ய டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
குழந்தைக்கு முன்னாள் மக்களை பாதுகாக்க வேண்டிய காவல் துறையினர் இவ்வாறு நடந்துகொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Leave a comment