அவுஸ்திரேலியாவில் விசப் பாம்புடன் விளையாடும் குழந்தை ஒன்றின் காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாம்பு என்றாலே பயமற்றவர்கள் இல்லை என்று சொல்லுமளவிற்கு, படையையே நடுங்க வைக்கும் தன்மைமை பாம்பு கொண்டிருக்கிறது.
இந்நிலையில், அவுஸ்திரேலியாவிலுள்ள பகுதியொன்றில், 2 வயதுக் குழந்தை ஒன்று பயமேதுமறியாது, பாம்புடன் விளையாடும் காணொலி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
குறித்த குழந்தையின் தந்தை அக்காணொலியைப் பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.
இந்தக் காணொலியைப் பார்வையிட்டுள்ள பலரும், ஆச்சரியம் வெளியிட்டு வருகின்றனர்.
Leave a comment