அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலம் இன்னிசைத்துறையில் கொடி கட்டிப்பறந்த பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் தகது 92ஆவது வயதில் காலமானார். .
கோவிட்டால் பாதிக்கப்பட்டிருந்த அவர் ஜனவரி 8ஆம் தேதி முதல் மும்பையில் உள்ள பிரிட்ஜ் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார் .
முன்னதாக உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவரது உடல்நிலை தேறி வருவதாக ஜனவரி 27ஆம் தேதி கூறிய மருத்துவர்கள் வென்டிலேட்டர் மூலம் வழங்கிய சிகிச்சையை நிறுத்தினர்.
எனினும் இன்று காலை மீண்டும் உடல்நிலை மோசமாகி அவர் உயிர் இவ்வுலகை விட்டு பிரிந்ததாக அவரது சகோதரி உறுதிப்படுத்தினார்.
#WorldNews
Leave a comment