download 8 1 3
இந்தியாஉலகம்செய்திகள்

ராமேஸ்வரத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம்!

Share

ராமேஸ்வரத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம்!

ராமேஸ்வரம் ராமநாத சாமி கோவிலுக்கு சொந்தமான வாகனங்கள் நிறுத்து மிடம் ஜெ.ஜெ.நகர் பகுதியில் உள்ளது. இங்கு நேற்று இரவு வெளிமாநிலத்தைச் சேர்ந்த சொகுசு கார் ஒன்று வந்தது.

அதில் சில மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் வந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட அந்தப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது 4-க்கும் மேற்பட்ட நபர்கள் காரில் வந்து இறங்கியதாகவும், அவர்கள் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் அந்தப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

போலீசாரின் வருகை குறித்து அறிந்த மர்ம நபர்கள் தப்பிச்சென்று விட்டனர். ஆனால் அவர்கள் வந்த கார் கோவில் வாகனம் நிறுத்து மிடத்தில் உள்ளது. இந்த காரில் என்னென்ன பொருட்கள் என்பது தெரியவில்லை.

ராமேஸ்வரத்தில் பணியாற்றும் மத்திய, மாநில உளவுப்பிரிவு போலீசார் ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி. பிரிவு போலீசார் உள்ளூர் போலீசார் தப்பிச்சென்ற மர்மநபர்கள் எங்கு பதுங்கியுள்ளனர் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி அவர்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

ராமேசுவரம் வந்த மர்ம நபர்கள் பயங்கரவாதிகளா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட பொருட்கள் உள்ளதா அல்லது கஞ்சா, தங்கம் போன்ற கடத்தல் பொருட்கள் உள்ளதா என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...