உலகம்செய்திகள்

அதிக குழந்தைகள் பெற்றால் வரிச் சலுகை! – அரசு அதிரடி

images 3
Share

அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு “ஒரு குழந்தை விதி” கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், அங்கு பிறப்பு விகிதம் குறைந்தபடியே வந்தது.

இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு ஒரு குழந்தை விதி ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள தம்பதிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும் கடந்த 5 ஆண்டுகளாக பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்தது.

இதையடுத்து பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒன்றுக்கு மேல் குழந்தைகளை பெற்றெடுக்கும் தம்பதிகளுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

இதற்காக வரிகள் தள்ளுபடி, சிறந்த சுகாதார காப்பீடு, இளம் குடும்பங்களுக்கு கல்வி, வீட்டு கடன், வேலைவாய்ப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்கி குழந்தை பிறப்பு விகிதத்தை ஊக்கப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பணக்கார சீன நகரங்கள், அதிக குழந்தைகளை பெற ஊக்குவிப்பதற்காக, வரி வீட்டு கடன், கல்வி சலுகைகள் வழங்குகின்றன. இது போன்ற அனைத்து மாகாணங்களும் சலுகைகள் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

பிறப்பு விகிதம் சரிந்து கொண்டே சென்றால் சீனாவின் மக்கள் தொகை 2025-ம் ஆண்டுக்குள் குறைய தொடங்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....