80 வயது மூதாட்டியை துஷ்பிரயோகம் செய்த தமிழ் இளைஞன்!

Canada boy

கனடாவில் மூதாட்டி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியதாகக் கூறி தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் 29 வயதான பிரவீன் ‘பாபி’ போல் குமார் என்ற இளைஞரே கைதானதாக கனடா- ரொறண்டோ பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 26 ஆம் திகதி நள்ளிரவு 12:53 மணியளவில் ஸ்கார்பரோவின் கோல்ஃப்டேல் கார்டன் பகுதியில் உள்ள கிரீன்ஹோல்ம் சேர்க்யூட் மற்றும் லோரன்ஸ் அவென்யூ ஈஸ்ட் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

84 வயதான மூதாட்டி ஒருவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, ​​​​ஒருவர் அவரது கதவைத் தட்டி அவருடன் நட்பாகப் பழகி, வீட்டிற்குள் நுழைந்து, அதற்குப் பின்னர் வன்புணர்வு செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

சந்தேகநபருக்கு எதிராக சட்டவிரோதமாக ஒரு குடியிருப்பில் தங்கியிருந்தது, தாக்குதல், வலுக்கட்டாயமாக அடைத்து வைத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கைதான குறித்த இளைஞனின் புகைப்படத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

மேலும் குறித்த நபர் தொடர்பில் மேலதிக தகவல் தெரிந்தவர்கள், தம்மை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#WorldNews

Exit mobile version