சவுதி அரேபிய அரசு, தப்லீக் ஜமாத் அமைப்பை தீவிரவாதிகளின் பட்டியலில் சேர்த்துள்ளதோடு, அவ்வமைப்பை தடையும் செய்துள்ளது.
ஆடை அணிதல், தனிப்பட்ட நடத்தை மற்றும் சடங்குகள் விஷயத்தில் மத நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என தப்லீக் ஜமாத் அமைப்பு தொடர்ந்து சவுதி அரேபிய அரசு நெருக்கடி கொடுத்து வந்துள்ளது.
இந்நிலையில் சன்னி இஸ்லாமிய இயக்கமான தப்லீக் ஜமாத் அமைப்பை சவுதி அரேபிய அரசு தடை செய்ததோடு, அவ்வமைப்பு தீவிரவாதிகள் பட்டியலிலும் சேர்த்துள்ளது.
இது தொடர்பில் ட்விட்டர் பதிவு வெளியிட்ட சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சகம்,
ஒவ்வெரு வெள்ளிக்கிழமை மசூதிகளில் தொழுகை நடைபெறும் போது, தப்லீக் ஜமாஅத் பற்றி மக்களை எச்சரிக்கும் வகையிலான பிரசங்கங்களை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவித்த இஸ்லாமிய விவகார அமைச்சகம்,
‘இந்த அமைப்பின் தவறான வழிகாட்டுதல், பொதுநிலையில் இருந்து விலகல் மற்றும் ஆபத்து பற்றி பிரகடனம் செய்ய வேண்டும்.
மேலும் சமூகத்திற்கு அவர்களால் ஏற்படும் ஆபத்தைக் பற்றி மக்களுக்கு தெளிவு படுத்துங்கள் .
தப்லீக் மற்றும் தாவா குழு உட்பட பாகுபாடான குழுக்களுடன் இணைந்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது’ என அந்த டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இவ்வமைப்பில் யாரும் இணைந்தாலோ அதை யாரும் ஆதரித்தலோ அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுமென சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.
#world
Leave a comment