அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைகளை ஆதரித்து போராட்டங்கள் வெடித்ததுள்ளன.
அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கருக்கலைப்பு உரிமைகளை ஆதரித்து பேரணிகள் மற்றும் போராட்டங்களை நடத்தி வருவதாக அறியமுடிகிறது.
டெக்சாஸ் மாநிலத்தின் கருக்கலைப்புக்கான அணுகலை கடுமையாக கட்டுப்படுத்தும் ஒரு புதிய சட்டத்திற்கு எதிராக இந்த போராட்டம் இடம்பெற்று வருகிறது .
அமெரிக்காவில் 1973 ஆம் ஆண்டு கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக்கபட்டது. இந்த நிலையில் அச் சட்டத்தை தொடருமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் உச்ச நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Leave a comment