உலகம்செய்திகள்

சண்டை என்பது எல்லோருக்கும் முக்கியமான ஒன்று: ஜெலென்ஸ்கியின் வெளியிட்ட வீடியோ

வரலாறு காணாத வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நாடு!
வரலாறு காணாத வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நாடு!
Share

சண்டை என்பது எல்லோருக்கும் முக்கியமான ஒன்று: ஜெலென்ஸ்கியின் வெளியிட்ட வீடியோ

உக்ரைனின் சுதந்திர தினத்தில் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் உக்ரைன் இன்று 32வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.

நாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், உக்ரைனின் சுதந்திர தினம் குறித்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், ‘ஒரு சிறந்த நாடான உக்ரைனின் சிறந்த மக்கள் இன்று ஒரு சிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள் – அது தான் சுதந்திர தினம்! சுதந்திரமான, வலிமையான மற்றும் கண்ணியமான மக்களுக்கு சமமான விடுமுறை. உக்ரேனிய ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்கும், முழு நாட்டிற்கும் விடுமுறையான நாள்’ என கூறியுள்ளார்.

மேலும் அவர், ‘இன்று நாம் நமது சுதந்திரத்தின் 32வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறோம் – உக்ரைனின் சுதந்திரம். இது நம் ஒவ்வொருவருக்குமான மதிப்பு. மேலும் இதற்காகத்தான் நாம் போராடுகிறோம்.

ஒரு பாரிய போரில் சிறிய செயல்கள் இல்லை. தேவையற்றவை இல்லை. முக்கியமில்லாதவை இல்லை. இதுதான் உண்மையான மக்களின் செயல்கள் மற்றும் வார்த்தைகள்’ என கூறியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...