உலகம்செய்திகள்

பசியில் வாடும் காசா மக்கள்! முதல்முறையாக வந்திறங்கிய 200 டன் உணவுகள்

tamilni 334 scaled
Share

பசியில் வாடும் காசா மக்கள்! முதல்முறையாக வந்திறங்கிய 200 டன் உணவுகள்

முதல்முறையாக கடல் வழி மார்க்கமாக அனுப்பப்பட்ட உதவி தொகுப்புகள் காசாவின் கடற்கடையில் வந்து இறங்கியுள்ளன.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் மத்தியில் போர் நிடித்து வரும் நிலையில், கிட்டத்தட்ட 23 லட்சம் காசா மக்கள் உணவு மற்றும் மருத்துவப் பொருட்களின் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில், இஸ்ரேலின் கடுமையான தடை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தரைவழி மற்றும் வான்வழி போக்குவரத்துகள் மூலம் உதவிப் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

எனவே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கப்பல் மூலம் காசா மக்களுக்கு உணவு, குடிநீர், மருந்து மற்றும் தற்காலிக தங்குமிடங்கள் ஆகிய உதவிப் பொருட்களை வழங்குவதற்காக மத்திய தரைக்கடல் பகுதியான காசா கடற்கரையில் தற்காலிக மிதக்கும் துறைமுகம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

ஜோ பைடனின் உத்தரவுப்படி, காசா கடற்கரையில் தற்காலிக மிதக்கும் துறைமுகத்தை அமெரிக்க ராணுவ வீரர்கள் கட்டியெழுப்பினர்.

இந்நிலையில் கடல் வழி மார்க்கமாக அனுப்பப்பட்ட உதவிப் பொருட்கள் முதல்முறையாக காசா கடற்கடையில் தற்போது வந்து இறங்கியுள்ளது.

இதனை ஐக்கிய அமீரக நாடுகள்(United Arab Emirates) ஒத்துழைப்புடன் அமெரிக்க தொண்டு நிறுவனமான World Central Kitchen (WCK) வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

தற்போது காசா கடற்கரைக்கு வந்து இறங்கியுள்ள உதவிக் கப்பல், காசா மக்களுக்கு மிகவும் தேவையான 200 டன் உணவுகளை கொண்டு வந்துள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் இஸ்ரேல் மிகப்பெரிய தடையாக உள்ளது என தொண்டு நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் தீவிரமாக மறுத்துள்ளது.

 

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...