1 18 scaled
உலகம்செய்திகள்

இந்தியாவுக்குதான் எங்கள் ஆதரவு: இலங்கை உயர் ஸ்தானிகர் தெரிவிப்பு

Share

இந்தியாவுக்குதான் எங்கள் ஆதரவு: இலங்கை உயர் ஸ்தானிகர் தெரிவிப்பு

கனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான தூதரக உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் ஆதரவு இந்தியாவுக்குத்தான் என்று கூறியுள்ளார், இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர்.

கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் கொல்லப்பட்ட சீக்கியர் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் இந்திய அரசாங்கத்தின் பங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.

அதைத்தொடர்ந்து, இந்திய தூதரக அதிகாரி ஒருவரை, நாட்டை விட்டு வெளியேறும்படி கனடா உத்தரவிட்டது. இந்திய தூதரக அதிகாரியை கனடா வெளியேற்றியதற்கு பதிலடியாக, கனேடிய தூதரக அதிகாரி ஒருவரை நாட்டைவிட்டு வெளியேற்றியது இந்தியா. அடுத்ததாக, கனேடியர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியது இந்தியா.

இந்நிலையில், இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகரான Milinda Moragoda, கனடாவின் குற்றச்சாட்டுகளுக்கு இந்தியாவின் பதில் உறுதியானதாகவும் நேரடியாகவும் உள்ளதாகவும், இந்த விடயத்தில் இந்தியாவை இலங்கை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர், இலங்கை மக்கள் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனது நாடு தீவிரவாதத்தை சகித்துக்கொள்ளாது என்றும் கூறியுள்ளார்.

இந்தியா மீதான கனடாவின் குற்றச்சாட்டு குறித்து ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, கனடாவின் குற்றச்சாட்டுகளுக்கு இந்தியாவின் பதில் உறுதியானதாகவும் நேரடியாகவும் உள்ளது என தான் கருதுவதாகவும், இந்த விடயத்தில் இந்தியாவை இலங்கை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
image 1200x630 4
செய்திகள்இலங்கை

மன்னாரில் பற்றியெரியும் குப்பைமேடு : மக்கள் கடும் பாதிப்பு

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட...

image 1200x630 3
செய்திகள்இலங்கை

தான் இறந்துவிட்டதாக வெளியான செய்தி குறித்து கருத்துவெளியிட்ட அரசியல்வாதி

தான் இறந்துவிட்டதாக ஒரு பொய்யான சமூக ஊடகப் பதிவு பரவி வருவதாகவும், இது குறித்து விசாரித்து...

image 1200x630 2
செய்திகள்உலகம்

ஆயுதங்களை கீழே போடுங்கள் ஹமாஸிற்கு அமெரிக்கா கண்டிப்பு

மத்திய கிழக்கில் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான மூத்த அமெரிக்க இராணுவத் தளபதி ஒருவர், “காசாவில் அப்பாவி பாலஸ்தீன...

image 1200x630 1 2
செய்திகள்இந்தியா

இலங்கை சிறைச்சாலைகளில் கடும் நெரிசல் நிலை

இலங்கையின் சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல் நிலை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டிலுள்ள 36 சிறைகளில் சுமார்...