இத்தாலியில் நடந்த துயரம் - இலங்கையை சேர்ந்த தந்தையும் மகனும் பலி
இலங்கைஉலகம்செய்திகள்

இத்தாலியில் நடந்த துயரம் – இலங்கையை சேர்ந்த தந்தையும் மகனும் பலி

Share

இத்தாலியில் நடந்த துயரம் – இலங்கையை சேர்ந்த தந்தையும் மகனும் பலி

இத்தாலியில் ஆற்றில் மூழ்கி இலங்கையை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தந்தையும் மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பியசென்ஸா மாகாணத்திலுள்ள ட்ரெபியா ஆற்றில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

குளிக்க சென்ற நிலையில் அனர்த்தம்
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 59 மற்றும் 28 வயதுடைய, லெஸ்லி கிலாஸ்டர் திசேரா வர்ணகுலசூரிய மற்றும் துலாஜ் நிலஞ்சன் திசேரா வர்ணகுலசூரிய ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

ஆற்றில் குளிக்க சென்ற நிலையில், இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்ப விசாரணையின்படி, மகன் முதலில் நீரில் மூழ்கி சிரமப்பட்ட நிலையில், தந்தை அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளதாக அறியமுடிந்துள்ளது.

எனினும் துரதிர்ஷ்டவசமாக, அந்த இடத்திற்கு உதவியாளர்கள் வந்தபோது, ​​அவர்கள் ஏற்கனவே நீரில் மூழ்கிவிட்டனர் எ‌ன்று கண்டறியப்பட்டுள்ளது

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...