இலங்கை யானைகள் பாகிஸ்தானுக்கு?
பாகிஸ்தான் கராச்சி மிருகக்காட்சிசாலையில் ஆபிரிக்க யானை நூர் ஜெஹான் உயிரிழந்ததையடுத்து, பாகிஸ்தானுக்கு இரண்டு பெண் யானைகளை பரிசாக வழங்குவதாக இலங்கை தெரிவித்துள்ளது என லாஹூரிலுள்ள இலங்கை தூதரக அதிகாரி யாசின் ஜோயா, அந்நாட்டின் ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
யானைகளுக்கான கோரிக்கை இலங்கைக்கு, அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே, யானைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப இலங்கை நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை இரண்டு பெண் யானைகளை பாகிஸ்தானுக்கு அனுப்பும் என்று குறித்த ஊடகத்துக்கு கூறிய அவர், அவற்றில் ஒன்று கராச்சி மிருகக்காட்சிசாலைக்கும் மற்றொன்று லாகூருக்கும் வழங்கப்படவுள்ளது.
கடந்த 2017 மே மாதத்தில் உயிரிழந்த சுஷீயின்மரணத்திற்குப் பிறகு லாகூர் மிருகக்காட்சிசாலையில் யானைகள் இருக்கவில்லை என்று இலங்கை தூதரக அதிகாரி யாசின் ஜோயா தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் யானைகள் குறித்த அறிவிப்பு இலங்கை அரசாங்கத்தினால் எதிர்வரும் சில நாட்களில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
#world