இந்தியாவும், இலங்கையும் இணைந்து விமானப்பயிற்சி ஒன்றை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக பாதுகாப்பு இலங்கையின் இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அத்தகைய கூட்டுப்பயிற்சிக்கான அடிப்படைகள் குறித்து இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த இந்திய விமானப்படையின் விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷலுடன் விவேக் ராம் சவுதாரியுடன் விவாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளைஎயார் சீஃப் மார்ஷல் சௌதாரி நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக மே முதலாம் திகதியன்று இலங்கை வந்தடைந்தார்.
இந்த நிலையில் அவருடனான கலந்துரையாடலின் போது, இலங்கையின் கடற்பரப்பில், இரு விமானப்படைகளும் பேரிடர் மேலாண்மை கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது குறித்து பேசப்பட்டுள்ளது.
#srilankaNews
Leave a comment