இலங்கை மற்றும் லாட்வியா ஜனாதிபதிகளிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் லாட்வியா ஜனாதிபதி எகில்ஸ் லெவிட்ஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்றையதினம் நடைபெற்றுள்ளது.
இவர்களின் இருதரப்பு பேச்சுவார்த்தையில் இரண்டு நாடுகளுக்குமிடையிலான 25 ஆண்டுகால உறவை வலுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது
கொரோனாத் தொற்றின் காரணமாக சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதோடு , சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் கல்வி , டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் விவசாயத்துறைகளில் இரண்டு நாட்டு உறவை வலுப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது .
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையில் மாற்றம் ஏற்படுத்தவேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
Leave a comment