அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி இருவர் உயரிழந்துள்ளனர்.
தெற்கு கலிபோர்னியாவில் நேற்றைய தினம் சிறிய விமானமொன்று விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானம் வீழ்ந்து நொருங்கியதால், இரண்டு வீடுகள்,லொறி, மற்றும் சில வாகனங்களும் தீக்கிரையாகின.
சான் டியாகோ நகரின் வடகிழக்கில் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புறநகர் பகுதியிலேயே விபத்துக்குள்ளானது.
இரட்டை என்ஜின் கொண்ட செஸ்னா சி 340 ரக விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானம் எங்கு நோக்கிப் பயணித்தது போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.
அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விமான விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது
Leave a comment