தூங்கிய அதிகாரிகள் – தப்பித்த கைதிகள்!
பலத்த பாதுகாப்பு நிறைந்துள்ள இஸ்ரேலின் கில்போவா சிறையிலிருந்து 6 கைதிகள் தப்பித்துச் சென்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறைப் பாதுகாப்பு அதிகாரிகள் தூங்கியமையே இதற்குக் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கில்போவா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பலஸ்தீனியர்கள் 6 பேர் சிறையிலிருந்து சுரங்கம் தோண்டி தப்பிச் சென்றுள்ளனர். தப்பிச் சென்றவர்களில் ஒருவர் முன்னாள் தீவிரவாதியாவார்.
இந்தச் சம்பவம் அங்குள்ள சி.சி.டி.வி. கமராவில் பதிவாகியுள்ளது.
அதில் கைதிகள் சுரங்கப் பாதையில் இருந்து சுற்றுச் சுவரைத் தாண்டி வெளியேறும் காட்சிகளும் அதனைக் கண்காணிக்கும் அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருக்கும் காட்சியும் பதிவாகியுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment