ரஷ்யா மற்றும் யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்காவினால் முன்மொழியப்பட்ட அமைதித் திட்டத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளில் பாரிய அளவிலான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் யுக்ரைன் மற்றும் ஐரோப்பியப் பிரதிநிதிகளைச் சந்தித்த பின்னர், அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) இந்த விடயத்தைத் தெரிவித்ததாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த அமைதித் திட்டம் தொடர்பில் சாதகமான கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) பின்வரும் கருத்துகளை வெளியிட்டுள்ளார். டொனால்ட் ட்ரம்பின் குழுவினர் தங்களது கருத்துகளைச் செவிமடுப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாகச் செலென்ஸ்கி கூறியுள்ளார்.
அத்துடன், யுக்ரைன் மிகவும் கடினமான பரீட்சையினை எதிர்கொள்வதாகவும், கண்ணியத்தை இழப்பது அல்லது ஒரு முக்கிய நண்பரை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தைகள், நீடித்து வரும் ரஷ்யா-யுக்ரைன் போரில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முக்கியமான இராஜதந்திர நகர்வாகப் பார்க்கப்படுகிறது.