12628814 airport
உலகம்செய்திகள்

நெதர்லாந்து விமான நிலையங்களில் ஆளில்லா விமானங்கள் அச்சுறுத்தல்: விமான சேவை தடை!

Share

ஐரோப்பிய நாடுகளில் சமீபகாலமாக விமான நிலையங்கள், இராணுவத் தளங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஆளில்லா விமானங்கள் (Drones) பறப்பது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தச் சூழலில், நெதர்லாந்தில் உள்ள விமான நிலையங்களில் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நெதர்லாந்தின் வோல்கெல் விமான நிலையத்தின் வான் பகுதியில் ஆளில்லா விமானங்கள் பறந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து, அவற்றை சுட்டு வீழ்த்த வான் பாதுகாப்புப் படையினர் முயற்சித்த நிலையில், குறித்த ஆளில்லா விமானங்கள் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, ஐன்ட்ஹோவன் (Eindhoven) விமான நிலையத்தின் வான் பகுதியிலும் சில ஆளில்லா விமானங்கள் பறந்தன.

இதன் காரணமாகப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, விமானச் சேவை சில மணி நேரம் துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் ஆளில்லா விமானங்கள் தொடர்ச்சியாகப் பறந்தமையால் அப்பகுதியில் அச்சநிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இந்த அச்சுறுத்தலைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டின் இராணுவ அதிகாரி ரூபன் பிரெக்கல்மன்ஸ் (Ruben Brekelmans) தெரிவித்துள்ளார். இனி வரும் காலங்களில் ஆளில்லா விமானத் தாக்குதல் குறித்த அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...