உலகம்செய்திகள்

ஆப்கான் தூதரகத்தில் துப்பாக்கி சூடு! – பாகிஸ்தான் தூதரை கொல்ல முயற்சி?

Share

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. தூதரக வளாகம் அருகே உள்ள கட்டிடத்தில் இருந்து மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இந்த தாக்குதல் தொடர்பாக ஒருவரை போலீசார் விசாரித்து வருகிறார்கள். தூதரக தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பது யார் என்பது உடனடியாக தெரிய வில்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் தூதரை கொல்லும் முயற்சியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. தூதர் காயமின்றி பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே ஆப்கானிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஹெக்மத்யாரின் அலுவலகம் அருகே தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. ஹெக்மத்யாரை குறி வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 18
இலங்கைசெய்திகள்

கொழும்பில் வெசாக் பார்க்க சென்ற இளைஞர்களால் கொலை செய்யப்பட்ட நபர்

கொழும்பில் வெசாக் பார்க்க சென்ற இளைஞர்களால் நபர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். நான்கு இளைஞர்களுக்கும்,...

14 17
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பேருந்து ஓட்டுநர்களை கண்காணிக்க AIஐ பயன்படுத்தவுளள அரசாங்கம்

இலங்கையில் பேருந்து ஓட்டுநர்களைக் கண்காணிக்கவும், பொதுப் போக்குவரத்தில் ஆசனப்பட்டிகளை கட்டாயமாக்கவும், செயற்கை நுண்ணறிவைப்(AI) பயன்படுத்தவுள்ளதாக இலங்கை...

13 17
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அதிக விலை கொண்ட புதிய வாகனங்களுக்கான கேள்வி தொடர்பில் வெளியான தகவல்

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் அதிக விலையை கொண்டிருக்கின்ற போதும், இலங்கையில் தற்போது புதிய வாகனங்களுக்கான கேள்வி...

12 18
இலங்கைசெய்திகள்

செயற்கை நுண்ணறிவு மோசடி குறித்து எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இடம்பெறும் மோசடிகள் குறித்து இலங்கையின் தொலைக்காட்சிப் பிரபலங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிரபல...