சீனாவில் கடந்த ஜூலை மாதம் முதல் தொடர்ந்து கடுமையான வெப்பநிலை நிலவி வருவதால் சீனாவின் வடமேற்கு கன்சு மாகாணத்தில் உள்ள பல மாவட்டங்கள் கடும் வறட்சியை எதிர்கொள்ள நேரிட்டுள்ளன.
இதன் காரணமாக சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 60 ஆயிரம் ஹெக்டேயர் அளவில் பயிர்கள் நாசமாகியுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வறட்சி நிலையானது இன்னும் சில நாள்களுக்கு தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தாலேயே சீனாவில் மோசமானளவு மழை வெள்ளம், வறட்சி மற்றும் காட்டுத் தீ ஆகியவை ஏற்படுகின்றன என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதேவேளை, மேற்கு ஐரோப்பாவின் ஜேர்மனி, நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம் மற்றும் ப்ரூசல்ஸ் ஆகிய நாடுகளிலும் காலநிலை மாற்றத்தாலே பெரும் இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment