ezgif 4 6dcd857938
உலகம்செய்திகள்

‘செல்பி’ மோகம்: கண்காணிப்பு கேமராவில் 400 முறை ‘செல்பி’ எடுத்த கரடி

Share

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் வடக்கு பகுதியில் உள்ள போல்டர் நகரில் 46,000 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக 9 ‘மோஷன் டிடெக்டிங்’ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கேமராக்கள் விலங்குகள் கடந்து செல்லும் போது புகைப்படங்கள் மற்றும் சிறிய வீடியோக்களை பதிவு செய்யும். பொதுவாக விலங்குகள் உணவு மற்றும் ஓய்வெடுக்கும் இடங்களைத் தேடி செல்லும்போது கேமராக்களில் பதிவாகும்.

ஆனால் அங்குள்ள கரடி ஒன்று ஒவ்வொரு முறையும் வேண்டுமென்றே கேமராவுக்கு அருகில் வந்து நின்று, மனிதர்கள் செல்போனில் ‘செல்பி’ புகைப்படம் எடுப்பதுபோல விதவிதமான போஸ் கொடுத்து வருகிறது.

ஒரு கேமராவில் பதிவான 580 படங்களில் கிட்டத்தட்ட 400 படங்கள் அந்த கரடியின் படங்கள் என பூங்கா ஊழியர்கள் ஆச்சரியத்துடன் கூறுகின்றனர். மேலும் கரடியின் ‘செல்பி’ படங்கள் சிலவற்றையும் டுவிட்டரில் அவர்கள் பகிர்ந்துள்ளனர். அவை தற்போது வைரலாக பரவி வருகின்றன.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...