” ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் நடைபெறும் போர் நிறுத்தப்பட வேண்டும். வெகு விரைவில் அமைதிப்பூ மலரவேண்டும்.”
இவ்வாறு கதிர்காமம் கந்தனிடம் ஆசிவேண்டி, தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார் ரஷ்ய நாட்டு யுவதியொருவர்.
மேற்படி இரு நாடுகளுக்கும் இடையிலான போர் காரணமாக இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இரு நாட்டு பிரஜைகளினதும் விசா காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டு பிரஜைகள் கடும் கவலையுடன் நாட்களை கழித்துவருகின்றனர். தமது உறவுகளுக்கு என்ன நடந்துள்ளது என தெரியாமல் தவித்துவருகின்றனர்.
இந்நிலையிலேயே போர் நிறுத்தப்பட வேண்டும் என ரஷ்யா நாட்டு யுவதியொருவர் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளமை அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
#SriLankaNews

