1617774030653
உலகம்செய்திகள்

உக்ரைனியர்களுக்கு ரஷ்ய குடியுரிமை! – கையெழுத்திட்டார் புடின்

Share

உக்ரைனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக ரஷ்யா கிட்டத்தட்ட 150 நாட்களாக அந்த நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது.

இந்த சூழலில் உக்ரைனியர்கள் அனைவருக்கும் ரஷ்ய குடியுரிமை வழங்குவதற்கான விரைவான பாதையை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆணையில் ரஷ்ய அதிபர் புடின் நேற்று கையெழுத்திட்டார்.

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களில் உள்ள உக்ரைனியர்கள் எளிதில் ரஷ்ய குடியுரிமையை பெறுவதற்கான விரைவு குடியுரிமை திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு ரஷ்ய அரசு அறிமுகப்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கிய 3 மாதங்களுக்கு பிறகு கடந்த மே மாதம் மேற்கு உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா மற்றும் கெர்சன் பிராந்தியங்களை சேர்ந்த மக்களும் ரஷ்ய குடியுரிமையை எளிதில் பெறும் வகையில் அந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

இந்த நிலையில்தான் உக்ரைனில் உள்ள அனைத்து மக்களும் ரஷிய குடியுரிமையை பெறுவதற்கு விரைவு குடியுரிமை திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆணையில் அதிபர் புடின் கையெழுத்திட்டுள்ளார்.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 34
செய்திகள்இந்தியா

சாத்தான்குளம் வழக்கு: 9 காவல்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

இந்தியாவையே உலுக்கிய தமிழ்நாட்டின் சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவல்துறை அதிகாரிகளுக்கும்...

world 33
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் கையிருப்பு சொத்துக்கள் மார்ச் மாதத்தில் வீழ்ச்சி: மத்திய வங்கி வெளியிட்ட புதிய அறிக்கை!

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 2026 மார்ச் மாத இறுதியில் 3.5 சதவீதம் வரை...

world 32
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும்: ஜனாதிபதி அநுரகுமார வலியுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் தணிந்து விரைவில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே...

world 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு: அடையாளம் காண்பதில் சிக்கல்!

நோர்வூட் பகுதியில் பாயும் கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் இன்று (ஏப்ரல்...