ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி 4 இந்திய மாணவர்கள் பலி

24 666374d508dd7

ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி 4 இந்திய மாணவர்கள் பலி

ரஷ்யாவின்(Russia) நோவ்கோரோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்த 4 இந்திய மாணவர்கள் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் அருகே அமைந்துள்ள ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் உயிரிழந்த மாணவர்களது உடல்களை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க ரஷ்ய நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து, இந்திய தூதரக அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

இதன்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஹர்ஷல் அனந்தராவ் டேசலே, ஜிஷான் அஷ்பக் பின்ஜரி, ஜியா பிரோஜ் பின்ஜரி மற்றும் மாலிக் குல்ம்கோஸ் முகம்மது யாகூப் ஆகிய 4 மாணவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக, மாஸ்கோவில் உள்ள இந்திய தூதகரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், உயிரிழந்த மாணவர்களின் உடல்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் வகையில் பணியாற்றி வருகிறோம்.

அவர்களைப் பிரிந்துள்ள குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவியையும் வழங்குவோம் எனவும் பத்திரமாக மீட்கப்பட்ட மாணவருக்கு முறையாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.vv

Exit mobile version