tamilni 154 scaled
உலகம்செய்திகள்

எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம்… அச்சத்தில் மற்றொரு நாடு: பரபரப்பாகும் போர்ச்சூழல்

Share

ரஷ்யா, தங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என்ற அச்சத்தில் ஸ்வீடன் நாடு போரை எதிர்கொள்ளத் தயாராகிவருவதாக வெளியாகியுள்ள செய்திகளால் பதற்றம் உருவாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், தங்களுக்கும் பிரச்சினை ஏற்படக்கூடும் என்று கருதி நேட்டோ அமைப்பில் சேரத் தயாரானது ஸ்வீடன். ஆனால், அதன் முடிவு ரஷ்யாவுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

ரஷ்ய ஜனாதிபதி புடின், நேட்டோ அமைப்பை ரஷ்யாவுக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கிறார். ஆகவே, நேட்டோவில் மேலும் மேலும் நாடுகள் சேர்ந்து அந்த அமைப்பை வலுப்படுத்துவது அவருக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாக, ரஷ்ய எல்லையிலுள்ள ஸ்வீடன், பின்லாந்து போன்ற நாடுகள் நேட்டோவில் இணைவது தனது நாட்டுக்கு ஆபத்து என அவர் கருதுகிறார்.

ஆகவே, ஸ்வீடன் நேட்டோ அமைப்பில் இணைய முயன்றுவருவதால், ஸ்வீடன் மீது கோபத்திலிருக்கிறார் புடின்.

ஸ்வீடன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என்பது குறித்த செய்திகள் முன்பே வெளியாகின. ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை, திடீரென ஸ்வீடனில் பரபரப்பு உருவாகியுள்ளது.

ரஷ்யா, உக்ரைனைத் தொடர்ந்து, தங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளதால், மக்கள் போருக்குத் தயாராக இருக்குமாறு மூத்த ஸ்வீடன் அதிகாரிகள் மக்களை வலியுறுத்தியுள்ளார்கள்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...