தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி இன்று பதவியேற்றுக்கொண்டார்.
சென்னை கிண்டியில் நடைபெற்றது .இந்த பதவியேற்பு விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி ஆர், என், ரவிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பதவியேற்ற பின்னர் கருத்து தெரிவித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழகத்துக்கு சேவை செய்வதுதான் எனது முதல் கடமை. தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசின் முன்னேற்றத்துக்கு முடிந்த வரை சிறப்பாக சேவையாற்றுவேன்.” – எனத் தெரிவித்துள்ளார்.
Leave a comment