1726752 jelenskiy
உலகம்செய்திகள்

உக்ரைன் வெளிநாட்டு தூதுவர்கள் அதிரடி நீக்கம்!

Share

உக்ரைன் மீது ரஸ்யா தொடுத்துள்ள போர் 150-வது நாளை நெருங்கியுள்ளது. உக்ரைனின் பல நகரங்களை ரஸ்யா கைப்பற்றியுள்ளது.

உக்ரைனுக்கு ராணுவ ரீதியிலான உதவி கிடைக்க சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு நாடுகளுக்கான உக்ரைன் தூதர்களை அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார்.

இந்நிலையில், ஜெர்மனி, இந்தியா, செக் குடியரசு, நார்வே மற்றும் ஹங்கேரிக்கான உக்ரைன் தூதர்களை பணிநீக்கம் செய்வதாக ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். இதற்கான காரணங்கள் குறித்தும், அவர்களுக்கு வேறு பணிகள் வழங்கப்படுமா என்பது குறித்தும் உக்ரைன் அதிபர் மாளிகை எந்த தகவலையும் வெளியிடவில்லை.

உக்ரைனுக்கு பொருளாதார மற்றும் ராணுவ ரீதியிலான உதவிகளை ஜெர்மனி வழங்கி வரும் நிலையில் அந்நாட்டிற்கான உக்ரைன் தூதரை ஜெலன்ஸ்கி நீக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 2
இலங்கைசெய்திகள்

திருமணத்திற்கு பணம் திரட்டுவதற்காக இளைஞர்கள் செய்த மோசமான செயல்

கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள பழங்கால விகாரையில் புரதான பித்தளை விளக்கை திருடிய குற்றச்சாட்டில் 3 பேர்...

25 2
இலங்கைசெய்திகள்

மகிந்த ராஜபக்ச தூக்கிலிடப்பட வேண்டும்! விமல் பரபரப்பு கருத்து

முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் போன்சேகா கூறுவது போன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

21 2
இலங்கைசெய்திகள்

நாட்டை மீட்க அர்ப்பணிப்பான சர்வதிகாரி தேவை : வலியுறுத்தும் சரத் பொன்சேகா

இலங்கையை மீட்பதற்கு, நாட்டை நேசிக்கக்கூடிய – அர்ப்பணிப்பான சர்வாதிகாரி அவசியம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்...

23 2
இலங்கைசெய்திகள்

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள்பரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது....