பனியில் உறைந்து இந்தியர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்கா-கனடா எல்லையில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் அண்டை நாடான கனடா வழியாக, சட்டவிரோதமாக அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர்.
மனிதர்களைக் கடத்தும் கடத்தல்காரர்கள் அகதிகளிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு, அவர்களை அமெரிக்காவுக்குள் கடத்திக்கொண்டு விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்தநிலையில், சட்டவிரோதமாக அகதிகள் சிலரை வேனில் அடைத்து அமெரிக்காவுக்குள் கடத்தி செல்ல முயன்றபோது, அமெரிக்காவின் வடக்கு டகோடா மாகாணத்துக்கு அருகே கனடா எல்லையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் குறித்த வேனைத் தடுத்து நிறுத்தி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களின் சோதனையில் குறித்த வேனுக்குள் ஒரு பச்சிளம் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை 4 பேர் பனியில் உறைந்து, உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, கடத்தல்கார ர் ஒருவரான ஸ்டீவ் ஷாண்ட் (வயது 47) என்பவரைக் கைது செய்து விசாரணையினை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில், பனியில் உறைந்து இறந்தபோன 4 பேரும் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.
#WorldNews
Leave a comment