உலகம்செய்திகள்

புலம்பெயர்தலை வைத்து அரசியல் செய்யும் கட்சிகள் வரிசையில் சுவிஸ் கட்சி…

2 11 scaled
Share

புலம்பெயர்தலை வைத்து அரசியல் செய்யும் கட்சிகள் வரிசையில் சுவிஸ் கட்சி…

இன்றைய சுழலில், உலக நாடுகள் பலவற்றிற்கு, தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த, தக்கவைக்க, சமாளிக்க, புலம்பெயர்ந்தோர் தேவைப்படுகிறார்கள்.

ஜேர்மனி, கனடா போன்ற நாடுகள் அதை வெளிப்படையாகவே கூறுகின்றன.

ஆனால், சில நாடுகளோ, புலம்பெயர்தலை வைத்து அரசியல் செய்கின்றன. குறிப்பாக, புலம்பெயர்தலுக்கு எதிரான கருத்துக்களை பிரச்சாரம் செய்து, மக்கள் ஆதரவை ஈர்க்க சில கட்சிகள் முயற்சிக்கின்றன. ஜேர்மனி போன்ற நாடுகளில், வலது சாரிக்கட்சிகள் சில அதில் வெற்றியும் பெற்றுள்ளன.

சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, சுற்றுலா என்றால் இருகரம் நீட்டு வெளிநாட்டவர்களை வரவேற்கும் அந்நாடு, புலம்பெயர்ந்தோர் நாட்டுக்குள் வருகிறார்கள் என்றால், கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் என்பது உலகறிந்த விடயம்.

ஆக, அதைப் பயன்படுத்திகொண்டு சில கட்சிகள் அரசியல் செய்ய முடிவு செய்துள்ளன. வலதுசாரிக் கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி, வெளிப்படையாகவே அதைச் சொல்லியுள்ளது.

சுவிஸ் மக்கள் கட்சி, புலம்பெயர்தலுக்கெதிரான கொள்கை கொண்ட கட்சியாகும். புகலிட சட்டங்களை கடுமையாக்குவதும், புலம்பெயர்தலைக் குறைப்பதும்தான் அதன் புலம்பெயர்தல் கொள்கைகள்.

புலம்பெயர்தல் குறித்து மக்களை எச்சரிக்கும் அக்கட்சி, வெளிநாட்டவர்கள், காப்பீடு மற்றும் பிற சமூக உதவிகள் பெறுவதன் மூலம், சுவிஸ் மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவதாக கருதுகிறது.

இந்நிலையில், சுவிஸ் மக்கள் கட்சி இந்த வார இறுதியில் நடைபெறும் தேர்தலில் வாக்குகளை அள்ளும் என்று கூறியுள்ளார், அக்கட்சி சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான Christian Imark.

அதற்குக் காரணம், புலம்பெயர்தல், ஆற்றல் பாதுகாப்பு மற்றும் ஆற்றலுக்கான கட்டண அதிகரிப்பு ஆகியவையே தங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் மையக் கருத்துக்கள் என வெளிப்படையாகவே கூறுகிறார் அவர்.

புலம்பெயர்தல் சுவிட்சர்லாந்துக்கு பெரிய தொல்லை என்று கூறும் Imark, ஏனென்றால், புலம்பெயர்ந்தோருக்காக உள்கட்டமைப்புகளையும் வீடுகளையும் அதிகரிக்கவேண்டியுள்ளது என்கிறார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...