இலங்கை
சுவிட்சர்லாந்தில் நெருக்கடியாகும் புகலிட கோரிக்கை
சுவிட்சர்லாந்தில் நெருக்கடியாகும் புகலிட கோரிக்கை
சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்தலுக்கெதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அங்குள்ள பல தரப்புக்கள் சமீப காலமாக தெரிவித்து வருகின்றன.
குறிப்பாக சுவிட்சர்லாந்தில் உள்ள சுவிஸ் மக்கள் கட்சி, புலம்பெயர்தலுக்கெதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கோரிக்கை விடுத்து வருகிறது.
இது தொடர்பில் சுவிஸ் மக்கள் கட்சியின் தலைவரான Marco Chiesa, தெரிவிக்கையில், சுவிட்சர்லாந்தில் புகலிடக்கோரிக்கைகளை பரிசீலிக்காமல், வெளிநாடுகளில் பரிசீலிக்கவேண்டும் என்றும் கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் நிலவும் அதிக அளவிலான பிரச்சினைகளுக்கும் புலம்பெயர்தல்தான் காரணம் என குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா வரி விதிப்பதுபோல, புலம்பெயர்ந்தோருக்கும் வரி விதிக்கவேண்டும் என்றும் புலம்பெயர்ந்தோருக்கு மருத்துவக்காப்பீடு வழங்கப்படுவதை கட்டுப்படுத்தவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன் பின்னணியில் இலங்கையிலிருந்து சுவிட்ஸர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை மற்றும் இலங்கையர்களுக்கு சுவிட்ஸர்லாந்தில் அகதி தஞ்சம் வழங்கும் நடைமுறை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது சுவிட்ஸர்லாந்தில் நிலவும் நடைமுறையின் அடிப்படையில் குறிப்பாக இலங்கையர்களுக்கு புகலிடம் வழங்கும் நடவடிக்கை கணிசமான அளவில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசு காலப்பகுதியில் சுவிட்ஸர்லாந்து – இலங்கைக்கிடையிலான ஒப்பந்தத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த வகையில் இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் சுவிட்ஸர்லாந்தில் இலங்கையர்களுக்கு புகலிடம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவை குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.