உலகம்செய்திகள்

ஹமாஸும், புடினும் ஜனநாயக நாடுகளை அழிப்பவை

Share

ஹமாஸும், புடினும் ஜனநாயக நாடுகளை அழிப்பவை

ஹமாஸும், ரஷ்ய ஜனாதிபதி புடினும் அருகில் உள்ள ஜனநாயக நாடுகளை அழித்தொழிப்பதே வேலையாக வைத்துள்ளனர் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தாக்குதல் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது ஆதரவை வெளிபடுத்தி வந்தார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமையான இன்று வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவத்தில் நாட்டு மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்றினார்.

அந்த உரையில் ஹமாஸ் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் இரண்டும் தீவிரவாதம் மற்றும் கொடுங்கோன்மையின் அச்சுறுத்தல் கொண்டவை.

இரண்டுமே அண்டை நாடுகளின் ஜனநாயகத்தை அழித்தொழிப்பதையே இலக்காக வைத்துள்ளனர்.

இதனால் ஏற்படும் மோதல்கள் மற்றும் குழப்பங்கள் உலகின் பிற பகுதிகளுக்கு பரவி அதன் பாதிப்புகள் அதிகரிக்க வைக்கும் என தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கும், இஸ்ரேலுக்கும் அமெரிக்கா அதிகமான நிதியுதவி வழங்க வேண்டும், இந்த நிதியுதவி அமெரிக்காவின் எதிர்கால நலனுக்கான முதலீடு.

இதனால் அமெரிக்காவின் எதிர்காலம் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு வருங்கால அமெரிக்க சந்ததிகள் இதன் மூலம் பலன் பெறுவார்கள், நமது நட்புறவுகளே நமக்கான பாதுகாப்பு என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...