அப்பாவிகளை கொன்ற பயங்கரவாதிகளுக்கு தண்டனை கொடுத்துள்ளோம்! இந்திய பாதுகாப்புத்துறை

24 3

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் உரிமையை இந்தியா பயன்படுத்தியிருக்கிறது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் மூலம் இந்தியாவின் ஆயுதப்படைகள் வரலாற்றை எழுதியுள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள இலக்குகளைத் தாக்கிய வெற்றிகரமான நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்த ராஜ்நாத் சிங், வான்வழித் தாக்குதல்கள் துல்லியம், எச்சரிக்கை மற்றும் உணர்திறனுடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் அவர், “எங்கள் அப்பாவிகளைக் கொன்றவர்களை மட்டுமே நாங்கள் கொன்றோம். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், எங்கள் படைகள் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி பயங்கரவாத பயிற்சி முகாம்களை அழித்து வலுவான பதிலடி கொடுத்தன.

இது கவனமாக திட்டமிடப்பட்ட பிறகு செய்யப்பட்டது. பயங்கரவாதிகளின் மன உறுதியைத் தாக்க, இந்த நடவடிக்கை அவர்களின் முகாம்கள் மற்றும் உள்கட்டமைப்பிற்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டது. எங்கள் ஆயுதப் படைகளின் துணிச்சலுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version