puthin
உலகம்செய்திகள்

பாலத்தை நேரில் சென்று பார்வையிட்ட புதின்! – வதந்திக்கு முற்றுப்புள்ளி

Share

ரஸ்ய அதிபர் புதின், தலைநகர் மாஸ்கோவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்தபோது மாடி படிக்கட்டில் இறங்கியபோது தவறி கீழே விழுந்ததாகவும், இதில் அவரது முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. மேலும் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் தனது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதின் பொது வெளியில் தோன்றினார். கடந்த ஒக்டோபர் மாதம் ரஸ்யாவின் கிரீமியா பகுதியில் உள்ள பாலத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் பாலத்தின் ஒரு பகுதி முற்றிலும் சேதமடைந்தது. பாலத்தை சீரமைக்கும் பணி விரைந்து நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து அப்பாலம் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.

கிரீமியா பாலத்தை புதின் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பாலத்தில் காரை ஓட்டி சென்றார். பின்னர் பாலத்தின் பழுது பார்ப்பு பணிகள் குறித்த அறிக்கையை துணை பிரதமர் மராட் குஷ்னுலினிடம் கேட்ட புதின், கட்டுமான தொழிலாளர்களிடம் உரையாடினார்.

கிரீமியா பாலத்தை புதின் பார்வையிட்ட காட்சிகள் அரசு தொலைக்காட்சியில் காட்டப்பட்டன. உக்ரைன் மீதான ரஷியா வின் போர் 10 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் ரஸ்யாவுக்குள் இருக்கும் 2 ராணுவ தளங்களை உக்ரைன் ராணு வம் டிரோன் மூலம் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...