3 27 scaled
உலகம்செய்திகள்

முக்கிய அமெரிக்க சீக்கியர்கள் உயிருக்கு ஆபத்து: FBI எச்சரிக்கை

Share

முக்கிய அமெரிக்க சீக்கியர்கள் உயிருக்கு ஆபத்து: FBI எச்சரிக்கை

அமெரிக்காவில் சீக்கிய சமூகத்தில் முக்கியமான தலைவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எஃப்.பி.ஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறைந்தது 3 சீக்கிய தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரித்துள்ள FBI, இது கனேடிய சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜரின் படுகொலைக்கு பின்னர் ஏற்படுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

திட்டமிடப்பட்ட இந்த படுகொலைக்கு இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பிருக்கலாம் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பிரதமர் ட்ரூடோவின் அந்த குற்றச்சாட்டுகளுக்கு கனேடிய மற்றும் அமெரிக்க உளவு அமைப்புகளின் ஒப்புதலும் இருந்துள்ளது.

ஆனால் இந்த சம்பவம் தற்போது கனடா மற்றும் இந்திய அரசுகளின் உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. கனேடிய மண்ணில் சட்டத்திற்கு புறம்பாக இந்திய அரசால் முன்னெடுக்கப்பட்ட படுகொலையாகவே இந்த விவகாரம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்திய தரப்பில், கனடாவின் குற்றச்சாட்டுகளை மொத்தமாக மறுத்துள்ளதுடன், இது ஜோடிக்கப்பட்டவை எனவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நிஜ்ஜர் படுகொலைக்கு சில வாரங்கள் முன்னர், பிரித்தானியாவிலும் பாகிஸ்தானிலும், சீக்கிய தலைவர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, அமெரிக்க சீக்கிய காக்கஸ் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் பிரித்பால் சிங் தெரிவிக்கையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு அவரும் மற்ற இரண்டு சகாக்களும் FBI அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க உளவு அமைப்புகளுக்கு கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில், பிரித்பால் சிங் உட்பட அமெரிக்க சீக்கிய தலைவர்கள் மூவரின் உயிருக்கு ஆபத்து என கூறப்படுகிறது.

மேலும், இந்த சந்திப்புக்கு 3 நாட்களுக்கு பின்னர், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் வழிமுறைகளை முன்வைத்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனிடையே, ஜூன் 22ம் திகதி அமர்ஜித் சிங் என்பவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக FBI அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் நியூயார்க்கை சேர்ந்த பத்திரிகையாளர் மற்றும் வர்ணனையாளர் ஆவால். வாஷிங்க்டன் நகரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு திரும்பும் வழியில், FBI அதிகாரிகள் இவரை தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் சில வாரங்களுக்கு பிறகு FBI அதிகாரிகள் நேரில் சந்தித்து விரிவான விளக்கமளித்துள்ளதாகவும் அவர் உறுதி செய்துள்ளார்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் 6 பேர்கள் ஈடுபட்டதாகவும், மொத்தம் 50 தோட்டாக்கள் சுடப்பட்டதில் 34 எண்ணிக்கையில் நிஜ்ஜார் மீது பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் இது திட்டமிடப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்ட படுகொலை என்றே நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...