உலகம்
பிரதமர் ட்ரூடோவுக்கு நன்றி தெரிவித்த கனேடிய சீக்கியர்கள்
பிரதமர் ட்ரூடோவுக்கு நன்றி தெரிவித்த கனேடிய சீக்கியர்கள்
சீக்கியர் படுகொலையில் தங்களுக்கு ஆதரவாக இந்தியாவை எதிர்த்து நின்றதற்காக கனேடிய சீக்கியர்கள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இக்கட்டான சூழலில் தங்களுக்காக குரல் கொடுத்ததாகவும் ட்ரூடோ தொடர்பில் கனேடிய சீக்கியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, இந்தியா போன்ற ஒரு நாட்டுக்கு எதிராக குரல் எழுப்பும் போது கடும் பின்னடைவு ஏற்படலாம் என்ற போதும், அந்த சிக்கலை எதிர்கொள்ள பிரதமர் ட்ரூடோ துணிந்தார் எனவும் கனேடிய சீக்கியர்கள் பாராட்டியுள்ளனர்.
ஒட்டாவா நகரில் இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகம் முன்பு ஆராப்பாட்டத்தில் ஈடுபட்ட சீகியர்கள் சிலரில் செந்தோக் சிங் என்பவர் தெரிவிக்கையில், கனடாவில் தற்போது பயத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
இதன் பொருட்டே, இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகம் முன்பு ஆராப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கனடாவில் சுமார் 770,000 சீக்கியர்கள் குடியிருக்கின்றனர். இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்திற்கு வெளியே, இந்த எண்ணிக்கை என்பது மிக அதிகம் என்றே கூறப்படுகிறது.
ஆனால், சமீப காலமாக கனேடிய சீக்கியர்களில் சிலர் காலிஸ்தான் பிரிவினை கோருவதில் இந்திய அரசாங்கம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறது. கனேடிய அரசியலில் களமிறங்கியுள்ள சீக்கியர்களில் தற்போது 15 உறுப்பினர்கள் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
அதாவது மொத்தமுள்ள ஆசனங்களில் இது 4 சதவீதத்திற்கும் அதிகம் என்றே கூறப்படுகிறது. இதில் ஜக்மீத் சிங் என்பவர் கட்சி தலைவராகவும், ட்ரூடோ அரசாங்கத்திற்கு ஆதரவளித்தும் வருகிறார்.
கனடாவை பொறுத்தமட்டில், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட எவர் ஒருவருக்கும் உரிமை உள்ளது. சீக்கியர்கள் தொடர்பில் இதுவரை வன்முறை, பயங்கரவாத நடவடிக்கை அல்லது தவறிழைத்தற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றே கூறுகின்றனர்.
காலிஸ்தான் தொடர்பில் தங்கள் கருத்தை வெளிப்படுத்த சீக்கியர்களுக்கு உரிமை உள்ளதாகவே ஒட்டாவா சீக்கிய சமூகத்தின் உறுப்பினரான Mukhbir Singh தெரிவிக்கிறார். மட்டுமின்றி, கனேடிய ஜனநாயக விழுமியங்களுக்காக ட்ரூடோ உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான Suk Dhaliwal தெரிவிக்கையில், தாம் காலிஸ்தான் ஆதரவாளர் அல்ல, ஆனால் காலிஸ்தான் தொடர்பில் தங்கள் கருத்தை வெளிப்படுத்த ஒவ்வொரு சீக்கியருக்கும் உரிமை உண்டு என்றே தாம் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் இந்திய நிர்வாகத்திற்கு பங்கிருப்பதாக தமது தொகுதி மக்கள் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் குரல் எழுப்ப ஒரு தலைவன் இருக்கிறான் என்ற எண்ணம் கனேடிய சீக்கிய மக்களிடம் தற்போது ஏற்பட்டுள்ளது என்றார் Suk Dhaliwal.