1 31
உலகம்

மதுபோதையில் தண்டவாளத்தில் கார் ஓட்டி Reels எடுத்தவர் கைது

Share

மதுபோதையில் தண்டவாளத்தில் கார் ஓட்டி Reels எடுத்தவர் கைது

மதுபோதையில் இருக்கும்போது ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டி ரீல்ஸ் எடுத்த நபரை பொலிஸார் கைது செய்தனர்.

பொலிஸார் கைது
இந்திய மாநிலமான ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் மதுபோதையில் இருப்பதாக கூறப்படும் நபர் ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டி ரீல்ஸ் எடுத்துள்ளார்.

அந்த நேரத்தில், ரயில் தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று வந்துள்ளது. அதனை பார்த்த அவர், உடனடியாக தண்டவாளத்தில் இருந்து காரை இறக்க முயற்சி செய்துள்ளார்.

ஆனால், தண்டவாளத்தில் கார் சிக்கியது. இதனை அறிந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தி பெரும் விபத்தை தவிர்த்தார்.

பின்னர், சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து வந்தனர். அப்போது அங்கிருந்த சிலர் உதவியுடன் தண்டவாளத்தில் இருந்து காரை வெளியே எடுத்தனர்.

பின்னர், அந்த நபர் காரை ஓட்டி தப்பிக்க முயன்றார். ஆனால், அந்த காரை துரத்திச் சென்று பிடித்து அவரை கைது செய்து காரையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

39
உலகம்செய்திகள்

வலுக்கும் போர் பதற்றம்: அரிய வாய்ப்பை தவற விட்ட பாகிஸ்தான்

இந்தியாவுடன் அமைதியை ஏற்படுத்துவதற்கான பல வாய்ப்புக்களை பாகிஸ்தான் தவற விட்டதாக இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர்...

33 2
உலகம்செய்திகள்

இந்தியாவையும் பாகிஸ்தானையும் பேச்சுக்கு அழைக்கும் முக்கிய நாடுகள்

அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையே பகைமை அதிகரித்து வருவதால், இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடி...

35 2
உலகம்செய்திகள்

இந்திய எல்லை பாதுகாப்பு படையினருக்கு எதிராக பாகிஸ்தான் கடும் துப்பாக்கிச்சூடு

ஜம்முவில் உள்ள ஆர்.எஸ். புரா செக்டாரில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினருக்கு எதிராக பாகிஸ்தான் கடும்...