hinad 1766299876
செய்திகள்உலகம்

சீனாவில் அதிசயம்: கடலுக்கு அடியில் ஆசியாவின் மிகப்பெரிய தங்கப் படிமம் கண்டுபிடிப்பு!

Share

கிழக்கு சீன கடல் பகுதியில், ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவிலான கடலுக்கடியிலான தங்கப் படிமத்தைச் சீனா கண்டுபிடித்துள்ளது. இந்த முக்கிய கண்டுபிடிப்பின் மூலம் சீனாவின் தங்கக் கையிருப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.

சீனாவின் ஷான்டாங் மாகாணம், யாண்டாய் நகரில் உள்ள லைஜோ (Laizhou) கடற்கரைக்கு அப்பால் கடலுக்கு அடியில் இந்தப் படிமம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் புதிய கண்டுபிடிப்புடன் சேர்த்து லைஜோ பகுதியின் ஒட்டுமொத்த தங்க இருப்பு 39 இலட்சம் கிலோவுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இது சீனாவின் ஒட்டுமொத்த தேசிய தங்க இருப்பில் சுமார் 26 சதவீதமாகும். இதன் மூலம் சீனாவின் தங்கம் உற்பத்தி மற்றும் இருப்பு ஆகிய இரண்டிலும் லைஜோ பகுதி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

உலகில் அதிக தங்கம் உற்பத்தி செய்யும் நாடாகச் சீனா இருந்தாலும், கையிருப்பில் ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவுக்குப் பின்னாலேயே உள்ளது. இதனால் 2021 முதல் புதிய படிமங்களைக் கண்டுபிடிப்பதில் சீனா தீவிரம் காட்டி வருகிறது:

கடந்த ஆண்டு லியானிங் மாகாணத்தில் 14.44 இலட்சம் கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. ஜின்ஜியாங் உய்குர் மலைப்பகுதியில் 10 இலட்சம் கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தத் தொடர் கண்டுபிடிப்புகள் சர்வதேசத் தங்கச் சந்தையில் சீனாவின் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...