வடகொரியாவின் தலைவர் மீண்டும் பொதுவெளியில் தோன்றியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.
வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன், ஒரு மாத கால இடைவெளிக்குப் பின்னர் பொது பார்வையில் தோன்றியுள்ளார்.
சீனாவுடனான எல்லைக்கு அருகில் மேற்கொள்ளப்படும் பாரிய வளர்ச்சித் திட்டத்தை ஆய்வு செய்ததாக வடக்கின் அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், கட்டுமானத்தின் வளர்ச்சி குறித்து கிம் திருப்தி கொண்டார் என்றும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் கிம்மின் குடும்பத்தினரால் போற்றப்படும் புனித மலையையும் வடகொரிய அதிபர் பார்வையிட்டதாக, அரச ஊடகமானது புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. கிம்மின் குடும்பத்தினால் போற்றப்படும் புனித மலையான மவுண்ட் பெக்டுவுக்கு அருகில் இந்த நகரம் உள்ளது.
இது வடகொரியாவின் புரட்சியின் ஆன்மீக மையமாக உத்தியோக்பூர்வமான கதைகளால் விபரிக்கப்படுகிறது எனவும் கூறப்படுகிறது.
வடகொரியாவின் வடக்கு அல்பைன் நகரமான சாம்ஜியோன், புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், ஹோட்டல்கள், ஸ்கை ரிசார்ட் மற்றும் வணிக, கலாசார மற்றும் மருத்துவ வசதிகளுடன் அமைக்கப்படுகிறது.
இது ‘சோசலிச உட்டோபியா’ என அழைக்கப்படும் ஒரு பெரிய பொருளாதார நகரமாக மாற்றப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
#WORLD
Leave a comment