இஸ்ரேல் – காசா போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனியர்கள் தொடர்பாக வெளியான தகவல்
கடந்த ஆண்டு ஒக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல் – காசா போரில் இதுவரை 40,000இற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் (Hamas) நடத்தி வரும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நிலப்பரப்பில் இது 1.7 % ஆகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், செயற்கைக்கோள் புகைப்படங்களின் தரவுபடி 60% கட்டிடங்கள் காசாவில் முற்றிலுமாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தரவுகளின் படி கடந்த சில மாதங்களாக பெரிதும் பாதிக்கப்பட்ட காசாவின் நகரமாக ரஃபா உள்ளது.
அதேவேளை, ஹமாஸின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த தரவுகளில், போராளி மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கை பிரித்து காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.