10 17
இலங்கைசெய்திகள்

கொழும்பில் ஹோட்டலுக்கு சென்ற வர்த்தகருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Share

கொழும்பில் ஹோட்டலுக்கு சென்ற வர்த்தகருக்கு காத்திருந்த அதிர்ச்சி

மசாஜ் நிலையமொன்றிற்கு சென்ற வர்த்தகர் ஒருவரிடமிருந்து 32 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகளை பெண் ஒருவர் கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் இணையம் ஊடாக பெண் ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்தி அவரது அழைப்பின் பேரில் (13 ஆம் திகதி) வர்த்தகர் ஹோட்டலொன்றுக்கு சென்றுள்ளார்.

குறித்த வர்த்தகர் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த போது, ​​தொடர்புகொண்ட பெண்ணுடன் வருகை தந்த மூவர் வர்த்தகரை மிரட்டி, அவர் அணிந்திருந்த 15 பவுன் தங்க நகைகள், மோதிரம், கைக்கடிகாரம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதன் பெறுமதி சுமார் 32,225,000 ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வர்த்தகர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...